/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போரால் ஈரானில் தவித்த கோவை ஆடிட்டர் மீட்பு போரால் ஈரானில் தவித்த கோவை ஆடிட்டர் மீட்பு
போரால் ஈரானில் தவித்த கோவை ஆடிட்டர் மீட்பு
போரால் ஈரானில் தவித்த கோவை ஆடிட்டர் மீட்பு
போரால் ஈரானில் தவித்த கோவை ஆடிட்டர் மீட்பு
ADDED : ஜூன் 24, 2025 06:30 AM

அன்னுார்: கோவை மாவட்டம், அன்னுார், அழகாபுரி நகரை சேர்ந்தவர்கள் விஸ்வநாதன் - அனுராதா தம்பதி. இவர்கள் மகன் பிரவீன், 30. திருமணமாகவில்லை. கோவையில் பி.காம்., -- சி.ஏ., படித்தார். 2023ல் துபாயில் ஒரு நிறுவனத்தில் ஆடிட்டராக பணியில் சேர்ந்தார்.
கடந்த மாதம் அந்நிறுவன பணிக்காக ஈரானுக்கு அனுப்பப்பட்டிருந்தார். சில நாட்களாக ஈரான் -- இஸ்ரேல் போர் நடக்கிறது. அச்சமடைந்த பிரவீன் மற்றும் அவருடன் சேர்ந்த சிலர் இந்திய துாதரகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
பெற்றோர் கூறுகையில், 'மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் எங்கள் மகன் தவிப்பது குறித்து தெரிவித்தோம். ஈரான் அரசிடம் பேசி, எந்த இடையூறும் இல்லாமல் விமானம் அங்கிருந்து இந்தியா புறப்பட்டுச் செல்ல ஏற்பாடு செய்து கொடுத்தனர். பாதுகாப்பாக விமான நிலையம் வரை செல்ல உதவினர்.
'நேற்று காலை அங்கு புறப்பட்டு, மாலை டில்லிக்கு பாதுகாப்பாக பிரவீனும், அவருடன் சிலரும் வந்து சேர்ந்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்' என்றனர்.