/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை விமான பயணிகளின் எண்ணிக்கை ஏப்ரலில் 3 லட்சத்தை தாண்டி சாதனை கோவை விமான பயணிகளின் எண்ணிக்கை ஏப்ரலில் 3 லட்சத்தை தாண்டி சாதனை
கோவை விமான பயணிகளின் எண்ணிக்கை ஏப்ரலில் 3 லட்சத்தை தாண்டி சாதனை
கோவை விமான பயணிகளின் எண்ணிக்கை ஏப்ரலில் 3 லட்சத்தை தாண்டி சாதனை
கோவை விமான பயணிகளின் எண்ணிக்கை ஏப்ரலில் 3 லட்சத்தை தாண்டி சாதனை
ADDED : மே 30, 2025 12:23 AM
கோவை, ;கோவை விமான நிலைய மாதாந்திர பயணிகள் எண்ணிக்கை, சாதனை அளவாக கடந்த ஏப்ரலில் முதன்முறையாக 3 லட்சத்தை தாண்டியது.
கோவை விமான நிலையத்தை கடந்த ஏப்ரலில் 3 லட்சத்து 8,681 பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். ஒரு மாதத்தில் 3 லட்சம் எண்ணிக்கையை எட்டுவது இதுவே முதன்முறையாகும். தென்னிந்தியாவில் இந்த எண்ணிக்கையை எட்டும் 7வது விமான நிலையம் கோவையாகும்.
ஏப்ரலில் தினமும் சராசரியாக 10 ஆயிரம் பயணிகள் கோவை விமான நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.
விமான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, கொங்கு குளோபல் போரம் அமைப்பின் இயக்குநர் சதீஷ் கூறியதாவது:
கோவை விமான நிலையம் மாதம் 3 லட்சம் பயணிகள் என்ற இலக்கை தாண்டியுள்ளது. பாலக்காடு உட்பட 8 மாவட்ட மக்கள் கோவை விமான நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த விமான நிலையம், நடப்பு நிதியாண்டில் 36 லட்சம் பயணிகளைக் கையாளும் என கணிக்கப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையத்தின் தற்போதைய முனையத்தை உடனடியாக மறு சீரமைக்க வேண்டும். இந்த வளர்ச்சியைத் தக்க வைக்க, தற்காலிகமாக ஒரு வருகை முனையத்தைக் கட்ட வேண்டும்.
வசதிகளை மேம்படுத்தினால், தினசரி பயணிகள் எண்ணிக்கை 15 ஆயிரமாக உயரும்.
கோவை விமான நிலைய விரிவாக்கத்தில், புதிய சர்வதேச முனையம் வரும் 2031ல் தான் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பகுதியில் கூடுதல் முதலீட்டை ஈர்க்க, விமான நிலையத்தில் வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
உள்மாநில விமானப் போக்குவரத்தில், கோவை-சென்னை-கோவை வழித்தடம் தினசரி 3,500 இருக்கை எண்ணிக்கைகளுடன் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, விமான நிலைய விரிவாக்கத்தைத் துரிதப்படுத்துவதுடன், தற்காலிக முனையத்தை உடனே கட்டமைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.