Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'கோவை- பசுமை வழிச்சாலையை மாற்றி அமைக்க முடியாது' மாவட்ட வருவாய் அலுவலர் பதில் கடிதம்

'கோவை- பசுமை வழிச்சாலையை மாற்றி அமைக்க முடியாது' மாவட்ட வருவாய் அலுவலர் பதில் கடிதம்

'கோவை- பசுமை வழிச்சாலையை மாற்றி அமைக்க முடியாது' மாவட்ட வருவாய் அலுவலர் பதில் கடிதம்

'கோவை- பசுமை வழிச்சாலையை மாற்றி அமைக்க முடியாது' மாவட்ட வருவாய் அலுவலர் பதில் கடிதம்

ADDED : ஜூன் 29, 2025 11:52 PM


Google News
அன்னுார்; கோவை--சத்தி பசுமைவழிச்சாலையை மாற்றி அமைக்க முடியாது' என்று ஆட்சேபனை தெரிவித்தவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

கோவை--சத்தி தேசிய நெடுஞ்சாலையில், 1,912 கோடி ரூபாயில், குரும்பபாளையத்தில் துவங்கி, அன்னுார், புளியம்பட்டி, சத்தி, பண்ணாரி வழியாக, கர்நாடக எல்லை வரை, பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட உள்ள நில உரிமையாளர்களிடம் ஆட்சேபனை மனுக்கள் பெறப்பட்டன. இந்நிலையில், ஆட்சேபனை தெரிவித்தவர்களுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் கையகப்படுத்துதல்) பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதில், ஆட்சேபனை தெரிவித்த நில உரிமையாளர்கள் பலருக்கு அனுப்பிய பதில் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது :

நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும், விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கவும் பசுமை வழிச்சாலை அமைக்கப்படுகிறது.

பல சாத்திய கூறுகளையும் ஆராய்ந்து, அதிகமான விவசாய நிலங்கள் பாதிக்காதபடி, அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத படியும், சாலை பாதுகாப்பு நெறிமுறைகளின் படியும் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த சாலைக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தை மாற்றி அமைக்கவோ, மறுபரிசீலனை செய்யவோ சாத்தியகூறுகள் இல்லை .

இழப்பீடு தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை சட்டம் 1956 3 (ஜி 3) பிரிவின் கீழ் விசாரணை நடைபெறும் போது, நில உரிமையாளர்கள் தங்கள் கோரிக்கையை, தாக்கல் செய்யலாம்.

நிலம் கையகப்படுத்துதலில், நியாயமான இழப்பீடு மற்றும் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு, மறு குடி அமர்வுக்கான உரிமைச் சட்டம் 2013-ன் படி இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் செய்து வழங்கப்படும்.

கட்டடங்கள், மரங்கள், இதர கட்டுமானங்கள் இருப்பின், தொடர்புடைய துறையில் இருந்து மதிப்பீடு பெறப்பட்டு இழப்பீட்டு தொகை வழங்கப்படும். எனவே, தங்களது ஆட்சேபனை மனு தேசிய நெடுஞ்சாலை சட்டம் 1956 3 (சி 3ன்) படி தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us