ADDED : ஜூன் 26, 2025 11:06 PM
அன்னுார்; அன்னுார், சத்தி ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வேளாண் விளை பொருட்கள் வாராந்திர ஏல விற்பனை நடக்கிறது. நேற்றுமுன்தினம் நடந்த ஏலத்தில் 32 ஆயிரத்து 545 தேங்காய்கள் விற்பனை செய்யப்பட்டன. குறைந்தபட்சம் ஒரு கிலோ தேங்காய் 61 ரூபாய் 10 பைசா முதல், அதிகபட்சம் ஒரு கிலோ 68 ரூபாய் 95 பைசா வரை விற்பனையானது. சமீப காலத்தில் தேங்காயின் அதிகபட்ச ஏல விற்பனை விலை இதுதான் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தேங்காய் கொப்பரை குறைந்தபட்சம் 209 ரூபாய் 99 பைசா முதல், அதிகபட்சம் 241 ரூபாய் வரை விற்பனையானது.
இத்தகவலை கோவை விற்பனை குழு முதுநிலை செயலாளர் ஆறுமுக ராஜன் தெரிவித்தார்.