/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'டாஸ்மாக்' மதுக்கடையை மூடுங்க! மாதர் சம்மேளன கூட்டத்தில் தீர்மானம்'டாஸ்மாக்' மதுக்கடையை மூடுங்க! மாதர் சம்மேளன கூட்டத்தில் தீர்மானம்
'டாஸ்மாக்' மதுக்கடையை மூடுங்க! மாதர் சம்மேளன கூட்டத்தில் தீர்மானம்
'டாஸ்மாக்' மதுக்கடையை மூடுங்க! மாதர் சம்மேளன கூட்டத்தில் தீர்மானம்
'டாஸ்மாக்' மதுக்கடையை மூடுங்க! மாதர் சம்மேளன கூட்டத்தில் தீர்மானம்
ADDED : ஜன 03, 2024 11:56 PM
உடுமலை : 'மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும், ராஜேந்திரா ரோட்டிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சிறப்பு பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உடுமலை இ.கம்யூ., கட்சி அலுவலகத்தில், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சிறப்பு பேரவைக்கூட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் சித்ரா துவக்கி வைத்தார்.
மாவட்ட துணைச்செயலாளர் பேபி, இ.கம்யூ., சார்பில் சவுந்தர்ராஜன், சுப்பிரமணியன், ரணதேவ், கிருஷ்ணசாமி பேசினர்.
கூட்டத்தில், 21 பேர் கொண்ட தாலுகா குழு ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டது; தாலுகா தலைவராக குருவம்மாள், துணைத்தலைவராக கவுரிசங்கரி, தாலுகாச்செயலாளராக பாப்பாத்தி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில், 'உடுமலை தாலுகாவுக்குட்பட்ட பகுதியில், மகளிர் உரிமை திட்டத்தில், அரசின் விதிமுறைகளுக்குட்பட்ட விடுபட்ட பயனாளிகளுக்கு மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும்.
ராஜேந்திரா ரோட்டிலுள்ள 'டாஸ்மாக்' மதுக்கடையால், பெண்களும், பொதுமக்களும் பாதிக்கின்றனர். ஆகவே, 'டாஸ்மாக்' மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும். உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு இயக்கப்பட்ட பெரும்பாலான அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும். உடுமலை பகுதியில், சமீபகாலங்களில், நகை பறிப்பு, வீடு புகுந்து திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. இதை தடுக்க, ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.