Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சுத்தமே சுகாதாரம்; நகராட்சியில் உறுதியேற்பு; விழிப்புணர்வு ஏற்படுத்திய நகராட்சி

சுத்தமே சுகாதாரம்; நகராட்சியில் உறுதியேற்பு; விழிப்புணர்வு ஏற்படுத்திய நகராட்சி

சுத்தமே சுகாதாரம்; நகராட்சியில் உறுதியேற்பு; விழிப்புணர்வு ஏற்படுத்திய நகராட்சி

சுத்தமே சுகாதாரம்; நகராட்சியில் உறுதியேற்பு; விழிப்புணர்வு ஏற்படுத்திய நகராட்சி

ADDED : செப் 19, 2025 09:11 PM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில், துாய்மை இயக்கம், 2.O என்ற திட்டத்தின் கீழ், அலுவலகம், அதன் சுற்றுப்புறத்தை துாய்மையாக பராமரிப்பது குறித்து உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி தலைவர் சியாமளா தலைமை வகித்தார். கமிஷனர் குமரன், துணை தலைவர் கவுதமன், நகர் நல அலுவலர் தாமரைக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதில், 'சுத்தமே சுகாதாரம் என்பதை என் வாழ்வில் வழிமுறையாய் கடைபிடிப்பேன்; துாய்மை மற்றும் சுகாதாரத்துடன் கூடிய வளர்ச்சியே எனது லட்சியம். எனது அலுவலகத்தையும், சுற்றுப்புறத்தையும், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வேன்.

உணவருந்தும் இடம், கழிப்பிடம் ஆகியவை முறையாக பயன்படுத்துவதோடு, சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க ஒத்துழைப்பேன். மீதமான உணவுப்பொருட்களை தனியாக சேகரித்து உரிய முறையில் அப்புறப்படுத்துவேன். துாய்மையை பேணிக்காப்பது, என உறுதிமொழி எடுத்தனர்.

தொடர்ந்து, துாய்மை பணியாளர்களுக்கு சுகாதாரப்பணிகள் குறித்து கமிஷனர் அறிவுரை வழங்கினார். அதன்பின், அலுவலக துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், கவுன்சிலர்கள் செந்தில்குமார், உமா மகேஸ்வரி மற்றும் நகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

வால்பாறை வால்பாறை நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் நடைமுறையில் உள்ளது. 'துாய்மையே சேவை' என்ற தலைப்பில், பள்ளி, கல்லுாரி மற்றும் பொது இடங்களில் துாய்மையை பேணிக்காக்கும் பணிகள் நடக்கிறது.

நகராட்சி சார்பில் துாய்மை சேவை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். புதிய பஸ் ஸ்டாண்ட், சிறுகுன்றா கூழாங்கல் ரோடு உள்ளிட்ட பகுதியில் சுற்றுலா பயணியர் வீசி சென்ற குப்பையை கல்லுாரி நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் சேகரித்தனர்.

விழிப்புணர்வு நகராட்சி அதிகாரிகள் பேசியதாவது:

வால்பாறையில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், வீடு மற்றும் கடைகளில் குப்பை சேகரிக்கப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது. அதன்பின், மறுசுழற்சி செய்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த உரம் விவசாயத்திற்காக பயன்படுத்த வழங்கப்படுகிறது.

பொதுமக்கள், சுற்றுலா பயணியர் பிளாஸ்டிக் கவர் பயன்படுத்துவதை தவிர்த்து, துணிப்பையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுற்றுப்புற சூழலை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும். பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்கள் துாய்மை இந்தியா திட்டத்தின் நோக்கம் குறித்துபொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

நிகழ்ச்சியில், வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us