ADDED : ஜூன் 25, 2025 10:13 PM

மேட்டுப்பாளையம்; கோத்தகிரி சாலையில் வனத்துறையினர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் துாய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம் வனப்பகுதியையொட்டி கோத்தகிரிக்கு செல்லும் சாலை உள்ளது. இச்சாலையில் செல்லும் சுற்றுலா பயணிகள், சாலையோரங்களில் சாப்பிட்டு விட்டு பிளாஸ்டிக் கவர்கள், பாட்டில்கள், மீதமான உணவுகள் உள்ளிட்டவற்றை வனத்திற்குள் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் வனவிலங்குகளின் உயிருக்கு ஆபத்து உள்ளதால், இதனை தூய்மைப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் வனச்சரகர் சசிக்குமார் தலைமையில், வனத்துறையினர் மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கோத்தகிரி சாலையில் உள்ள வனச்சோதனை சாவடியில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் வரை தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதில் சுமார் 50 கிலோ பிளாஸ்டிக் கவர்கள், வாட்டர் பாட்டில்கள், உணவு பார்சல் செய்யப்பட்ட கவர்கள் சேகரிக்கப்பட்டன.----