ADDED : மே 31, 2025 04:22 AM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நகராட்சிப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் துாய்மைப் பணிகள் குறித்து நகராட்சி கமிஷனர் அமுதா ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் அறிவுரையின் படி, மேட்டுப்பாளையம் நகராட்சிப்பகுதியில் உள்ள 15 நகராட்சி அரசு பள்ளிகள் மற்றும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களில், துாய்மைப் பணிகள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் குறித்த பணிகளை, மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா ஆய்வு செய்தார்.
இதுகுறித்து, நகராட்சி கமிஷனர் அமுதா கூறுகையில், ''ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், அனைத்து நகராட்சி பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் துாய்மைப் பணிகள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் குறித்த பணிகளை ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன,'' என்றார்.---