/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ எஸ்.என்.எஸ்., அகாடமியில் வகுப்புகள் துவக்க விழா எஸ்.என்.எஸ்., அகாடமியில் வகுப்புகள் துவக்க விழா
எஸ்.என்.எஸ்., அகாடமியில் வகுப்புகள் துவக்க விழா
எஸ்.என்.எஸ்., அகாடமியில் வகுப்புகள் துவக்க விழா
எஸ்.என்.எஸ்., அகாடமியில் வகுப்புகள் துவக்க விழா
ADDED : ஜூன் 30, 2025 11:11 PM

கோவை; எஸ்.என்.எஸ்.,அகாடமி பள்ளியில் வகுப்புகள் துவக்க நாள் விழா சிறப்பாக நடைப்பெற்றது.
விழாவில் மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் முன்னாள் மாணவர்களும், துவக்கம் முதல் இதே பள்ளியில் பயிலும் மாணவர்களும், தங்களது பயணம் மற்றும் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
பள்ளியின் நிறுவனர் மறைந்த சுப்பிரமணியனுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில், மாணவர்கள் நடனம் ஆடினர். நிறுவனரின் ஒப்பற்ற கல்விப்பணியைப் போற்றும் வகையிலும், நினைவு கூறும் வகையிலும், நிகழ்வுகள் இருந்தன.
இவ்விழா, பள்ளியின் இலக்குகள் மற்றும் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிப்பதாகவும் பெருமையை பறைசாற்றும் விதமாகவும் இருந்தது.