லாரியில் பைக் மோதி வாலிபர் பலி
போத்தனூர்: மதுக்கரை, அய்யப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் உதயகுமார் மகன் தினேஷ், 23; தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் நள்ளிரவு பணி முடிந்து வீட்டிற்கு, பைக்கில் பை - பாஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.
ரூ. 1.80 லட்சம் செம்பு கம்பி திருட்டு
கோவை: ஆர்.எஸ்.புரம் கண்ணுசாமி ரோட்டை சேர்ந்தவர் ரோனத் போர்வல், 31. பாப்பநாயக்கன்பாளையத்தில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். ரோனத் நேற்று கடையில் உள்ள பொருட்களின் இருப்பு விவரத்தை சரிபார்த்த போது, ரூ. 1.80 லட்சம் மதிப்பிலான, 200 கிலோ செம்பு கம்பிகள் திருடு போனது தெரிந்தது. ரோனத் புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிந்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.
திருட முயன்ற வாலிபர் கைது
கோவை: எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி மூகாம்பிகை நகரில் எல்லை கருப்பராயன் கோவில் உள்ளது. கணேசன் என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் நேற்று காலை கோவிலுக்கு சென்ற போது, உள்ளே இருந்து வாலிபர் ஒருவர் வெளியே ஓடி வந்தார். சந்தேகமடைந்த கணேசன், வாலிபரை பிடித்து விசாரித்தார். கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கோவிலுக்குள் புகுந்த வாலிபர் திருட்டில் ஈடுபட முயற்சித்ததும், ஆட்கள் வந்ததால், தப்பி செல்ல முயன்றதும் தெரிந்தது. வாலிபரை சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த வாலிபர் தர்மபுரி மாவட்டம் நல்லாம்பள்ளியை சேர்ந்த ரிக்கி பாண்டி, 26 எனத் தெரிந்தது. போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
அடையாளம் தெரியாத மூதாட்டி பலி
கோவை: கணபதி கோபால்சாமி கோவில் அருகே, 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மயக்க நிலையில் ரோட்டோரத்தில் கிடந்தார். அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் பச்சை நிற ஜாக்கெட்டும், கருநீல நிற நைட்டியும், அனிந்திருந்தார். அவரது இடது முழங்கை அருகே பழைய காயத் தழும்பும், நெற்றியில் இடதுபுறம் ஒரு கருப்பு மச்சமும் இருந்தது. சரவணம்பட்டி போலீசார் அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.