1.5 கிலோ கஞ்சா பறிமுதல்
சாய்பாபாகாலனி போலீசாருக்கு, சங்கனுார் பள்ளம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக, ரகசிய தகவல் கிடைத்தது. அங்குள்ள பழைய ரைஸ் மில் காம்பவுண்ட் அருகே, சந்தேகத்துக்கு இடமாக நின்றுகொண்டிருந்த, கணபதியை சேர்ந்த அமாமத்,25, பிரசாந்த்,27, ராஜேஷ்,26, வடவள்ளியை சேர்ந்த பிரதீப்,24 ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்களை சோதனையிட்டபோது விற்பனைக்கு வைத்திருந்த, 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். நான்கு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
வாகனங்கள் பறிமுதல்
பீளமேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். டைடல் பார்க் அருகே பாதி கட்டிமுடிக்கப்பட்ட ரயில்வே பாலம் அருகே, நின்று கொண்டிருந்த நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கிஷோர்,24, புலியகுளத்தை சேர்ந்த சகாயராஜ்,40 ஆகியோரை சோதனையிட்டபோது, 200 கிராம் கஞ்சாபறிமுதல் செய்யப்பட்டது. கார், டூவீலர், பவர் பாயின்ட் பேக், ஏர் டைப் கவர், ரூ.600 ரொக்கம் பறிமுதல் செய்ய,இருவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
குடிபோதையில் கத்திக்குத்து
பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் நரேஷ்சகனி, 24. இவரும், இவரது உறவினருமான ராஜேஷ் ஆகியோர் ஆவாரம்பாளையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஒரு வீட்டில் தங்கி கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் விக்ரம் என்பவரும்தங்கியுள்ளார்.
இளம்பெண் பலி
குனியமுத்தூர் அடுத்து சுகுணாபுரம், செந்தமிழ் நகரை சேர்ந்தவர் ராபின்சன். இவரது மனைவி பானுபிரியா, 27. கடந்த,22ம் தேதி மாலை ராபின்சன் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பினார். குளியலறையில் பானுபிரியா நினைவின்றி கிடப்பதை கண்டார்.