/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளி அருகே 'குடி'மகன்கள் தொல்லை கேள்விக்குறியாகும் பாதுகாப்பு பள்ளி அருகே 'குடி'மகன்கள் தொல்லை கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
பள்ளி அருகே 'குடி'மகன்கள் தொல்லை கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
பள்ளி அருகே 'குடி'மகன்கள் தொல்லை கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
பள்ளி அருகே 'குடி'மகன்கள் தொல்லை கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
ADDED : ஜூன் 20, 2025 02:28 AM
உடுமலை : உடுமலை, ராஜலட்சுமி நகர் நகராட்சி துவக்கப்பள்ளி அருகே, 'குடி'மகன்கள் அட்டகாசம் செய்வதால் குழந்தைகளின் பாதுகாப்பு பாதிக்கப்படுகிறது.
உடுமலை, ராஜலட்சுமி நகரில், நகராட்சி துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் அருகில் குடியிருப்புகளும் உள்ளன. இப்பள்ளியின் அருகில் தனியார் இடம் பராமரிப்பில்லாமல் உள்ளது.
மேலும், சுற்றுப்பகுதியிலும் செடிகள் வளர்ந்து புதர்க்காடாய் மாறியுள்ளது. இப்பகுதியில் 'சில்லிங்' முறையில் மது விற்பனை நடப்பதால், 'குடி'மகன்களின் அட்டகாசம் தொடர்ந்து நடக்கிறது. சில நாட்களில் மாலை நேரங்களிலும் அவர்கள் ஆரம்பித்து விடுகின்றனர். குழந்தைகள் பள்ளியிலிருந்து பாதுகாப்பாக வீடு திரும்புவிது பெரிய சாதனையாக உள்ளது.
இரவு நேரங்களில், அவ்வழியாக சென்று வருவதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். போலீசார் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, இப்பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் மற்றும் அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.