/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கைத்தறி ஆடைகளில் அணிவகுத்த குழந்தைகள் கைத்தறி ஆடைகளில் அணிவகுத்த குழந்தைகள்
கைத்தறி ஆடைகளில் அணிவகுத்த குழந்தைகள்
கைத்தறி ஆடைகளில் அணிவகுத்த குழந்தைகள்
கைத்தறி ஆடைகளில் அணிவகுத்த குழந்தைகள்
ADDED : செப் 25, 2025 12:37 AM

கோவை: காளப்பட்டியில் அமைந்துள்ள மிடாஸ்டச் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி வளாகத்தில், கைத்தறி ஆடைகளின் சிறப்புகளை உணர்த்தும் விதமாக, குழந்தைகளுக்கான பேஷன் ஷோ நடந்தது. மாணவர்கள், பாரம்பரிய கைத்தறி ஆடைகள் அணிந்து மேடையில் அழகழகாய் அணிவகுத்து வந்தனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ரஞ்சித், நெசவாளர்கள் நம் கலாசாரத்தின் முதுகெலும்பு என்றும், அவர்களை ஊக்குவிக்க கைத்தறி துணிகளை அதிகப்படியாக அனைவரும் பயன்படுத்த வேண்டும் எனக் கூறினார். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், 'அனைவரும் கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவாக நிற்போம்' என உறுதிமொழி எடுத்தனர்.
பள்ளி வளாகத்தில் நெசவாளர்களின் சிறப்பு கைத்தறி கண்காட்சியும் நடந்தது. பெற்றோர் பார்வையிட்டு பொருட்கள் வாங்கி மகிழ்ந்தனர். பள்ளி நிர்வாகத் தலைவர் ராம் ஆனந்த், தலைமை ஆசிரியர் ஷர்மிளா ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.