/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தண்டவாளத்தில் துண்டான குழந்தை; போலீஸ் விசாரணை தண்டவாளத்தில் துண்டான குழந்தை; போலீஸ் விசாரணை
தண்டவாளத்தில் துண்டான குழந்தை; போலீஸ் விசாரணை
தண்டவாளத்தில் துண்டான குழந்தை; போலீஸ் விசாரணை
தண்டவாளத்தில் துண்டான குழந்தை; போலீஸ் விசாரணை
ADDED : செப் 16, 2025 11:04 PM
கோவை; கோவையில் ரயில் தண்டவாளம் அருகே, ஒரு குழந்தை இறந்து கிடந்த வழக்கில், குற்றவாளிகளை பிடிக்க இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டம் போத்தனுார் ரயில்வே போலீசார், போத்தனுார் - இருகூர் ரயில் பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இருகூர் - ராவத்துார் ரயில் தண்டவாளம் அருகே ஒன்றரை வயது ஆண் குழந்தையின் சடலம் கிடப்பதை பார்த்தனர். அருகில் மிளகாய் பொடி, கோழி ரத்தம், கோழிக்கால் உள்ளிட்டவை கிடந்தன. குழந்தையை நரபலி கொடுத்திருக்கலாம் என்கிற தகவல் பரவியது.
தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், மோப்பநாய் உதவியுடன் குழந்தை கிடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். போத்தனுார் ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இவ்விவகாரத்தில், 'குழந்தையை நரபலி கொடுக்கவில்லை.
குழந்தையை கொலை செய்யும் நோக்கில் தண்டவாளத்தில் வைத்ததால், ரயில் சக்கரத்தில் சிக்கி, உடல் நசுங்கி உயிரிழந்திருக்கலாம். கொலையை திசை திருப்பவே மிளகாய் பொடி, கோழி ரத்தத்தை தெளித்துள்ளனர்' என போலீசார் தெரிவித்தனர்.
குற்றவாளிகளை கண்டறிய, டி.எஸ்.பி., பாபு தலைமையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றிய போலீசார், விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.