/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'அழுது கொண்டே இருந்தாலும் உழுது கொண்டே இருக்கின்றனர்' விவசாயிகள் குறித்து செல்லமுத்து ஆதங்கம்'அழுது கொண்டே இருந்தாலும் உழுது கொண்டே இருக்கின்றனர்' விவசாயிகள் குறித்து செல்லமுத்து ஆதங்கம்
'அழுது கொண்டே இருந்தாலும் உழுது கொண்டே இருக்கின்றனர்' விவசாயிகள் குறித்து செல்லமுத்து ஆதங்கம்
'அழுது கொண்டே இருந்தாலும் உழுது கொண்டே இருக்கின்றனர்' விவசாயிகள் குறித்து செல்லமுத்து ஆதங்கம்
'அழுது கொண்டே இருந்தாலும் உழுது கொண்டே இருக்கின்றனர்' விவசாயிகள் குறித்து செல்லமுத்து ஆதங்கம்
ADDED : ஜன 31, 2024 02:16 AM

பல்லடம்:''உழவர்கள் அழுதுகொண்டே இருந்தாலும், மறுபக்கம் உழுதுகொண்டே இருக்கிறான்,'' என, தென்னையை காப்போம் நிகழ்ச்சியில் செல்லமுத்து ஆதங்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், 'ஈசா மண் காப்போம்,' இயக்கத்தின் சார்பில் தென்னை திருவிழாவில், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து பேசியதாவது:
இன்றைய அரசாங்கங்களுக்கு உழவர்கள் மீது அக்கறை இல்லை. தென்னையை பெற்றவன் இன்று கண்ணீரில் உள்ளான். தேசிய வேலை உறுதி திட்டத்தினால், பல நூறு கோடி ரூபாய் வீணாகி வருகிறது. இதனால், விவசாயத்துக்கு ஆள் கிடைக்காத நிலை ஏற்பட்டு, விவசாயிகள் தென்னைக்கு மாறினர்.
பலமுறை மத்திய மாநில அரசுகளிடம் இது குறித்து தெரியப்படுத்தியும் கண்டுகொள்ளாமல் உள்ளன. பாமாயிலை இறக்குமதி செய்து அதற்கு மானியம் கொடுக்கும் மானங்கெட்ட அரசுதான் இங்கு செயல்பட்டு வருகிறது.
தென்னை விவசாயம் வாழ்வாதாரம் உயர, தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தியும் அரசுகள் கண்டுகொள்ளவில்லை. ஆனால், தென்னை விவசாயிகளுக்கு, 'ஈசா' கைகொடுத்து வருகிறது.
உழவர்கள் அழுதுகொண்டே இருந்தாலும், மறுபக்கம் உழுதுகொண்டே இருக்கிறான். ஆண்டவனின் தேரோட்டம்கூட நின்றுபோகும். ஆனால், உழவர்களின் ஏரோட்டம் நிற்காது. 'குடி உயர்ந்தால் கோன் உயரும்' என்பதை அரசு தவறாக உணர்ந்ததால், தமிழகம் முழுவதும் சாராய கடைகளை திறந்து விட்டனர்.
குளம் குட்டைகளில் எதற்கு கட்டடம் கட்ட அனுமதி கொடுத்தார்கள். லஞ்சத்துக்கு ஆசைப்பட்டதன் விளைவு, இன்று மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு, அவர் பேசினார்.