/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மனை வரன்முறைப்படுத்தும் முகாம் தேதிகளில் மாற்றம்மனை வரன்முறைப்படுத்தும் முகாம் தேதிகளில் மாற்றம்
மனை வரன்முறைப்படுத்தும் முகாம் தேதிகளில் மாற்றம்
மனை வரன்முறைப்படுத்தும் முகாம் தேதிகளில் மாற்றம்
மனை வரன்முறைப்படுத்தும் முகாம் தேதிகளில் மாற்றம்
ADDED : பிப் 06, 2024 01:19 AM
கோவை:அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான சிறப்பு முகாம் தேதிகளில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அனுமதியற்ற மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் காலம் இம்மாதத்துடன் முடிவடைகிறது. எனவே, பொது மக்கள் 2016ம் ஆண்டு அக்., 20ம் தேதிக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட மனை மற்றும் பிரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான சிறப்பு முகாம்கள், அந்தந்த மண்டல அலுவலகங்களில் வரும், 11, 18ம் தேதிகளில் நடத்தப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, நிர்வாக காரணங்களால் வரும், 18 மற்றும் 25ம் தேதிகளுக்கு, மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொது மக்கள் தங்களின் மனை ஆவணம், வரைபடம் மற்றும் வங்கி கணக்கில் இருந்து விண்ணப்ப கட்டணமாக ரூ.500 ஆன்லைனில் செலுத்தி விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.
தங்களது பகுதியில் அமையும் அனுமதியற்ற மனைப்பிரிவு வரைபடங்களை வரும், 23ம் தேதிக்குள் பிரதான அலுவலக நகரமைப்பு பிரிவில் அளிக்குமாறு, மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.