ADDED : செப் 15, 2025 11:19 PM
கோவை; கோவை தெற்கு ராஜிவ் காந்தி நகரை சேர்ந்தவர் நிதின் நாராயணா, 26. இவர், தனது தாய் சபிதா, பாட்டி ரங்கநாயகி ஆகியோருடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை 9.45 மணிக்கு பாட்டி ரங்கநாயகியின் அலறல் சத்தம் கேட்டது. நிதின் நாராயணா, சபிதா ஆகியோர் சென்று பார்த்தபோது, ரங்கநாயகி தரையில் விழுந்து கிடந்தார். அவர் அணிந்திருந்த மூன்றரை பவுன் செயினை ஒருவர் பறித்துக் கொண்டு, தப்புவதை பார்த்தனர். அந்நபரை அவர்கள் துரத்தினர். அதற்குள் அந்நபர், வீட்டுக்கு வெளியே ரோட்டில் பைக்கில் தயாராக நின்றிருந்த, மற்றொரு நபருடன் தப்பினார். சிங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.