/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பெரிய குயிலி நடுநிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா பெரிய குயிலி நடுநிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா
பெரிய குயிலி நடுநிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா
பெரிய குயிலி நடுநிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா
பெரிய குயிலி நடுநிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா
ADDED : மார் 25, 2025 12:35 AM

சூலுார்:
பெரிய குயிலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
சுல்தான்பேட்டை ஒன்றியம் பச்சாபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பெரிய குயிலை ஒன்றிய நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைமை ஆசிரியர் அருள்ராஜ் வரவேற்றார்.
முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தலைமை வகித்து பேசுகையில், மாணவ, மாணவியர் கல்வி கற்பதில் கவனம் செலுத்தினால், உயர் கல்விக்கு எளிதாக செல்லலாம். அரசு ஏராளமான நலத்திட்டங்களை மாணவர்களுக்கு வழங்குகிறது. அவற்றை பயன்படுத்தி கொள்ள அனைவரும் முன்வரவேண்டும், என்றார்.
பள்ளியின் முன்னாள் மாணவர்கள், ஊர் பொதுமக்கள் வாழ்த்தி பேசினர்.
விழாவை ஒட்டி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வட்டார கல்வி அலுவலர் பிரான்சிஸ் சார்லஸ் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர், பள்ளி மேலாண்மை குழுவினர் பங்கேற்றனர்.