/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சி.டி.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் சீட்டு கட்டாய் சாய்ந்த விக்கெட் சி.டி.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் சீட்டு கட்டாய் சாய்ந்த விக்கெட்
சி.டி.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் சீட்டு கட்டாய் சாய்ந்த விக்கெட்
சி.டி.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் சீட்டு கட்டாய் சாய்ந்த விக்கெட்
சி.டி.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் சீட்டு கட்டாய் சாய்ந்த விக்கெட்
ADDED : ஜூன் 19, 2025 11:53 PM
கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் இரண்டாவது டிவிஷன் போட்டிகள் பி.எஸ்.ஜி.,- ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. இதில், சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் நினைவு கிரிக்கெட் கிளப் அணியும், ஆதித்யா கிரிக்கெட் கிளப் அணியும் மோதின.
பேட்டிங் செய்த, சர் ராபர்ட் அணியினர், 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 138 ரன்கள் எடுத்தனர். எதிரணி வீரர் குருபரன், நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார். ஆதித்யா கிரிக்கெட் கிளப் அணியினர், 26.5 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு, 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். வீரர்கள் கிரிஷ் சஞ்சய், 61 ரன்களும், ஹரேந்திரா, 40 ரன்களும் எடுத்தனர்.
மூன்றாவது டிவிஷன் போட்டியில் கொங்கு கிரிக்கெட் கிளப் அணியும், ரெயின்போ கே.எம்.பி., கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொங்கு கிரிக்கெட் கிளப் அணியினர், 50 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 236 ரன்கள் எடுத்தனர்.
ரெயின்போ அணியினரோ, 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 220 ரன்கள் எடுத்தனர். வீரர் பிரிதிவ் ராஜ், 76 ரன்களும், அருண் பாண்டியன், 56 ரன்களும் எடுத்தனர். எதிரணி வீரர்கள் ராஜசேகரன், இசக்கி ஆகியோர், தலா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர்.
ஆறாவது டிவிஷன் போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா எம்.வி.சி.சி., அணியும், இந்தியன் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. இதில், ராமகிருஷ்ணா அணியினர், 50 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 200 ரன்கள் எடுத்தனர்.
வீரர் சுந்தர்ராஜ், 42 ரன்கள் எடுத்தார். எதிரணி வீரர் விஷ்வா நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார்.
இந்தியன் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியினர், 44 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு, 201 ரன்கள் எடுத்தனர். வீரர்கள் மனோபாலன், 56 ரன்களும், பரத், 43 ரன்களும், சோகைல் அக்தர், 39 ரன்களும், ஞானசேகரன், 34 ரன்களும் எடுத்தனர்.