/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோர்ட்டில் ஆர்ப்பாட்டம் செய்தவர் மீது வழக்கு கோர்ட்டில் ஆர்ப்பாட்டம் செய்தவர் மீது வழக்கு
கோர்ட்டில் ஆர்ப்பாட்டம் செய்தவர் மீது வழக்கு
கோர்ட்டில் ஆர்ப்பாட்டம் செய்தவர் மீது வழக்கு
கோர்ட்டில் ஆர்ப்பாட்டம் செய்தவர் மீது வழக்கு
ADDED : ஜூன் 28, 2025 10:51 AM
கோவை; கோவை முதன்மை போக்சோ கோர்ட் சிரஸ்தார் ராஜேஸ்வரி. இக்கோர்ட்டில் கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், 2021-ல் தெற்கு உக்கடம், அம்மன் காலனி, மூன்றாவது வீதியை சேர்ந்த ரிஷ்வான், 32 என்பவர் மீது போடப்பட்ட போக்சோ , வழக்கு விசாரணை நடக்கிறது. இதன் வாய்தா வரும் 4ம் தேதி போடப்பட்டுள்ளது.
நேற்று காலை, கோர்ட்டில் வழக்கு நடந்துகொண்டிருந்தது. அப்போது கோர்ட்டினுள் நுழைந்த ரிஷ்வான், கையில் தேசிய கொடியை பிடித்தவாறு, தனது வழக்கை முடிக்கவேண்டும். இல்லாவிடில், வழக்கை வேறு கோர்ட்டிற்கு மாற்றம் செய்ய வேண்டும். அதுவரை கோர்ட்டிலிருந்து வெளியே செல்லமாட்டேன் என கூறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கோர்ட் பணி பாதித்தது. இதையடுத்து சிரஸ்தார் ராஜேஸ்வரி புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.