ADDED : ஜூன் 11, 2025 09:12 PM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் மொத்த காய்கறி மார்க்கெட் உள்ளது. கடந்த சில நாட்களாக கேரட் வரத்து குறைவால் விலை ஏறியது. தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் மொத்த காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நேற்று சுமார் 85 வண்டிகளில் 4 ஆயிரம் மூட்டை கேரட் வந்தது. தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
நேற்று கேரட் 1 கிலோ ரூ.15 முதல் ரூ.40 வரை மட்டுமே விற்பனை ஆனது, என்றார்.