ADDED : அக் 22, 2025 10:07 PM
கோவில்பாளையம்: கீரணத்தத்தில் மின்சாரம் தாக்கி கார் டிரைவர் பலியானார்.
கீரணத்தத்தில் வினோ பிரேம் தாஸ் என்பவர் வாடகை கார் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் தூத்துக்குடி மாவட்டம், நாங்குநேரியைச் சேர்ந்த நடேசன் மகன் தங்கதுரை, 42. என்பவர் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் தங்கதுரை அந்த நிறுவனத்தில் காரை கழுவுவதற்காக மின்மோட்டாரை ஸ்விட்ச் ஆன் செய்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து அவரது மனைவி ஸ்ரீதா கொடுத்த புகாரின் பேரில், கோவில்பாளையம் போலீசார், பாதுகாப்பு உபகரணம் செய்து தராமல், மின்மோட்டாரை இயக்கச் செய்து உயிரிழப்பு ஏற்படுத்தியதாக நிறுவன உரிமையாளர் வினோ பிரேம் தாஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


