ADDED : ஜூன் 24, 2025 11:13 PM
கோவை; சாய்பாபா காலனி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக, போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீசார் கோவில் மேடு, திலகர் வீதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் இருந்தார்.
அவரிடம் விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். போலீசார் சோதித்த போது, அவரிடம் கஞ்சா இருந்தது.
அவரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்ததில், அவர் இடையர்பாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.