/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கேம்போர்டு மாணவர்கள் அஞ்சலி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கேம்போர்டு மாணவர்கள் அஞ்சலி
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கேம்போர்டு மாணவர்கள் அஞ்சலி
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கேம்போர்டு மாணவர்கள் அஞ்சலி
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கேம்போர்டு மாணவர்கள் அஞ்சலி
ADDED : ஜூன் 14, 2025 11:33 PM

கோவை: கோவை கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள், 100க்கும் மேற்பட்டோர் பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி, ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
விபத்தில் உயிரிழந்தோருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்த பள்ளி தலைவர் அருள் ரமேஷ்,'' இது மிகுந்த வேதனையை ஏற்படுத்தும் நிகழ்வு. மாணவர்கள்ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்துவது,இரக்கம், மனித நேயத்தின் உண்மையான அர்த்தத்தையும், ஒற்றுமையையும் அவர்களுக்கு கற்றுத்தரும்,'' என்றார்.
மாணவர்கள் இணைந்து எழுதிய, அனுதாபக் குறிப்பு பதிக்கப்பட்ட பெரிய பதாகை, அன்பின் குறியீடாக ஆமதாபாத் அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. பள்ளித் தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ், முதல்வர் பூனம் சயல் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.