ADDED : மார் 25, 2025 12:28 AM
அன்னுார்:
விளை பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அன்னுார் சத்தி ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், புதன் தோறும் ஏல விற்பனை நடைபெறுகிறது. இதில் தேங்காய், கொப்பரை, பருத்தி உள்ளிட்ட பல்வேறு விளை பொருட்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வருகின்றனர். எந்த இடைத்தரகு கமிஷனும் தரத் தேவையில்லை. தேசிய அளவில் பிற சந்தைகளில் உள்ள விலையையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
விற்பனை செய்ய முடியாவிட்டால் இங்கு இருப்பு வைத்து நல்ல விலை வரும்போது விற்றுக் கொள்ளலாம். இருப்பு வைக்கும் விளைபொருட்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்.
'எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேங்காய், கொப்பரை, பருத்தி உள்ளிட்ட விளை பொருட்களை புதன்கிழமை காலை நடைபெறும் ஏலத்திற்கு விற்பனைக்கு கொண்டு வரலாம்,' என விற்பனை கூட கண்காணிப்பாளர் அழைப்பு விடுத்துள்ளார்.