/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்புசொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு
சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு
சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு
சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜன 10, 2024 10:23 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு வட்டாரத்தில், மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க, தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டாரத்தில், தோட்டக்கலை துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்படுகிறது.
கிணத்துக்கடவுக்கு உட்பட்ட பகுதியில், 265 ஹெக்டேர் அளவுக்கு, 2.20 கோடி ரூபாய்க்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க அளவு நிர்ணயம் செய்யப்பட்டது. இதில், 160 ஹெக்டேர் அளவுக்கு, 1.45 கோடி ரூபாய்க்கு சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு ஏக்கர் முதல் 12 ஏக்கர் நிலம் உள்ள விவசாயிகள் இதற்கு பதிவு செய்யலாம். மேலும், சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
சொட்டு நீர் பாசனம் பெற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைந்த விவசாயிகள், மீண்டும் பதிவு செய்யலாம். மேலும், இத்திட்டத்தில் சந்தேகம் இருந்தால், கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்யலாம். இத்தகவலை, கிணத்துக்கடவு உதவி தோட்டக்கலை துறை இயக்குனர் ஜமுனாதேவி தெரிவித்தார்.