/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காப்பீடு காலாவதியாகி இருந்தால் புதுப்பிக்க தபால்துறை அழைப்பு காப்பீடு காலாவதியாகி இருந்தால் புதுப்பிக்க தபால்துறை அழைப்பு
காப்பீடு காலாவதியாகி இருந்தால் புதுப்பிக்க தபால்துறை அழைப்பு
காப்பீடு காலாவதியாகி இருந்தால் புதுப்பிக்க தபால்துறை அழைப்பு
காப்பீடு காலாவதியாகி இருந்தால் புதுப்பிக்க தபால்துறை அழைப்பு
ADDED : மார் 23, 2025 11:09 PM
கோவை : தபால் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய ஆயுள் காப்பீடு, சந்தா செலுத்தாமல் காலாவதியாகி இருந்தால், பாலிசிதாரர்கள் பயன்பெறும் வகையில், அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தபால் ஆயுள் காப்பீடு இயக்குனர் அறிவிப்பின் படி, தொடர்ந்து சந்தா தொகையை செலுத்தாமல், காலாவதியான தபால் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய தபால் ஆயுள் காப்பீடு பாலிசிதாரர்கள் பயன்பெறும் வகையில், தற்போது செலுத்த வேண்டிய தாமதகட்டணத்தில், அதிகபட்சம் 3,500 ரூபாய் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி, வரும் மே 31ம் தேதிக்குள், காலாவதியான தங்கள் தபால் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய தபால் ஆயுள் காப்பீடு பாலிசிகளை புதுப்பிப்பதன் வாயிலாக, இத்தொகை தள்ளுபடி பெற்று பயன்பெறலாம்.
காலாவதியான பாலிசிகளை புதுப்பிப்பதன் வாயிலாக, போனஸ் மற்றும் ஆயுள் காப்பீடு பாதுகாப்பு ஆகிய அனைத்து வசதிகளையும் பெற முடியும்.
பொதுமக்கள், தங்கள் அருகில் உள்ள தபால் அலுவலகங்களை அணுகி, காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க, கோவை கோட்ட முதுநிலை தபால் கோட்ட கண்காணிப்பாளர் சிவசங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.