ADDED : செப் 26, 2025 06:29 AM
கோவை; கோவை விதைச்சான்று மற்றும் உயிர்மச் சான்றளிப்பு துறை உதவி இயக்குனர் மாரிமுத்து அறிக்கை:
ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் குறுவைபட்ட நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. ஏ.டி.டி., 37, ஏ.எஸ்.டி., 16, கோ 51, ஏடிடி(ஆர்) 45 ஆகிய ரகங்கள், விதைப்பண்ணையில் விதைக்கப்பட்டு, பயிர் வளர்ச்சிப் பருவத்தில் உள்ளது.
நடவு செய்த 35 நாட்களுக்குள் அல்லது பூக்கும் பருவத்துக்கு 15 நாட்களுக்கு முன், விதை சான்றளிப்பு துறையில் பதிவு செய்தால் மட்டுமே, விதைச்சான்று அலுவலர்களால் ஆய்வு செய்ய இயலும். அரசு மற்றும் தனியார் விதை நெல் உற்பத்தியாளர்கள் குறித்த காலத்தில், கோவை தடாகம் சாலையில் உள்ள விதைச்சான்றளிப்பு அலுவலகத்தில், கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.