/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 5,440 டன் விதைகளுக்கு சான்று விதை உற்பத்திக்கு அழைப்பு 5,440 டன் விதைகளுக்கு சான்று விதை உற்பத்திக்கு அழைப்பு
5,440 டன் விதைகளுக்கு சான்று விதை உற்பத்திக்கு அழைப்பு
5,440 டன் விதைகளுக்கு சான்று விதை உற்பத்திக்கு அழைப்பு
5,440 டன் விதைகளுக்கு சான்று விதை உற்பத்திக்கு அழைப்பு
ADDED : மே 23, 2025 11:57 PM
கோவை : கோவை மாவட்டத்தில், கடந்த 4 ஆண்டுகளில் 5,440 டன் விதைகளுக்கு, விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறை வாயிலாக சான்று அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விதை உற்பத்தி செய்து வருவாய் ஈட்ட, விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறை உதவி இயக்குநர் மாரிமுத்து அறிக்கை:
கோவை மாவட்டத்தில், சம்பா பருவத்தில் தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், 210 ஹெக்டர் பரப்பில், 11 ரகங்களில் நெல் விதைப்பண்ணைகள் அமைக்கப்படுகின்றன. ஆனைமலை, பொள்ளாச்சி ஆழியாறு ஆயக்கட்டு பகுதியில் 4 குறுவை பருவ ரகங்களும், சம்பா பருவத்தில் 5 ரகங்களிலும் நெல் விதைப் பண்ணை 600 ஹெக்டர் பரப்பில் அமைக்கப்படுகிறது.
இந்த விதைகளுக்கு பல்வேறு கட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டு, சான்று வழங்கப்படுகிறது. சான்று அட்டையுடன், தரமான விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
கடந்த 4 ஆண்டுகளில், கோவை விதைச்சான்றளிப்பு துறையால், அரசு, அரசு சார்பு மற்றும் தனியார் உற்பத்தியாளர்களால், 4,930 ஹெக்டரில் விதைப்பண்ணை அமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்ட, 5,440 டன் விதைகளுக்கு சான்றளிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள், சான்று பெற்ற விதைகளைப் பயன்படுத்துவதால் அதிக மகசூல் பெறலாம். சான்று பெற்ற விதைகளை உற்பத்தி செய்வதன் வாயிலாகவும் வருவாய் ஈட்ட முடியும்.
எனவே, புதிதாக விதை உற்பத்தி செய்ய விருப்பம் உள்ளவர்கள், கோவை தடாகம் சாலையில் உள்ள விதைச் சான்றளிப்புத் துறை அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.