ADDED : பிப் 06, 2024 12:26 AM
கோவை;மாவட்ட அளவிலான 'சி' டிவிஷன் கால்பந்து லீக் போட்டியில், நெய்விலை எப்.சி., அணி, ஏழு கோல் வித்தியாசத்தில், அபார வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான கால்பந்து லீக் போட்டி, நவக்கரை ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது.
இதில் நேற்று முன்தினம் மாலை நடந்த போட்டியில், நெய்விலை எப்.சி., மற்றும் ராயல் எப்.சி., அணிகள் மோதின.
இப்போட்டியின் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய, நெய்விலை எப்.சி., அடுத்தடுத்து கோல்களை அடித்தது. ஆட்ட நேர முடிவில், 7 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில், ஏ.ஜே.கே., கல்லுாரி எப்.சி., அணி 3 - 1 என்ற கோல் கணக்கில், இந்து முஸ்லீம் எப்.சி., அணியை வீழ்த்தியது.