/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ முகூர்த்த நாளால் பஸ்களில் கூட்ட நெரிசல் முகூர்த்த நாளால் பஸ்களில் கூட்ட நெரிசல்
முகூர்த்த நாளால் பஸ்களில் கூட்ட நெரிசல்
முகூர்த்த நாளால் பஸ்களில் கூட்ட நெரிசல்
முகூர்த்த நாளால் பஸ்களில் கூட்ட நெரிசல்
ADDED : ஜூன் 08, 2025 10:00 PM

பொள்ளாச்சி ; வைகாசி மாதத்தின் கடைசி முகூர்த்தம் என்பதால், நேற்று பஸ்களில் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
உத்திராயண காலத்தின் ஐந்தாவது மாதமாக வருவது ரிஷப மாதம் எனப்படும் வைகாசி மாதமாகும். கோடை வெயில் முடிந்து இதமான குளிமை வர துவங்கும் இளவேனில் காலமாகும்.
இது வசந்த காலத்தின் துவக்க மாதம் என்பதால், திருமணங்கள் போன்ற விசேஷங்கள் அதிகம் நடைபெறும் மாதமாக வைகாசி மாதம் உள்ளது.
அவ்வகையில், நேற்று, வைகாசி மாதத்தின் கடைசி முகூர்த்தம் என்பதால், பல இடங்களில் திருமணம், காதுகுத்து, கோவில் கும்பாபிேஷகம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடந்தன. இதனால், பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
குறிப்பாக, கோவை, திருப்பூர், பழநி செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகரித்தது. பயணியர் பலரும் இருக்கைகளை பிடிக்க, முண்டியடித்துக் கொண்டு பஸ்களில் ஏறினர். இருக்கை கிடைக்காத பயணியர், நின்று கொண்டே பயணிக்கவும் முற்பட்டனர்.