/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புல் மெஷின்ஸ் சார்பில் புதிய இயந்திரம் அறிமுகம் புல் மெஷின்ஸ் சார்பில் புதிய இயந்திரம் அறிமுகம்
புல் மெஷின்ஸ் சார்பில் புதிய இயந்திரம் அறிமுகம்
புல் மெஷின்ஸ் சார்பில் புதிய இயந்திரம் அறிமுகம்
புல் மெஷின்ஸ் சார்பில் புதிய இயந்திரம் அறிமுகம்
ADDED : மார் 22, 2025 11:15 PM

சூலுார்: கோவையில் உள்ள புல் மெஷின்ஸ் நிறுவனம், உலகின் வேகமாக வளர்ந்து வரும் பேக்ஹோ லோடர் உற்பத்தி நிறுவனமாக உயர்ந்துள்ளது. தற்போது, பேக்ஹோ லோடர் சூப்பர் ஸ்மார்ட் பிஎஸ்வி எனும் புதிய இயந்திரத்தை வடிவமைத்துள்ளது.
நிறுவன தலைவர் வரதராஜ், நிர்வாக இயக்குனர் பார்த்திபன் முன்னிலையில், ஜி.ஆர்.டி., அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் வித்யபிரகாஷ், புதிய இயந்திரத்தை அறிமுகப்படுத்தினார். புல் மெஷின்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பார்த்திபன் கூறியதாவது:
பல பன்னாட்டு போட்டியாளர்களை வீழ்த்தி, இந்திய சந்தையில் எங்கள் நிறுவனம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 65க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தற்போது, அதிநவீன முறையில் தயாரிக்கப்பட்ட, சூப்பர் ஸ்மார்ட் பிஎஸ்வியை அறிமுகப்படுத்தி உள்ளோம். சுற்றுச்சூழல் தர விதிமுறைகளுக்கு ஏற்ப, அதிக செயல்திறனுடனும், இரண்டு இன்ஜின்களோடு, ஆப்பரேட்டர்கள் விரும்பும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நேரமும், பணமும் சேமிக்கப்படும். இந்தாண்டு மேலும் நான்கு வகை இயந்திரங்களை அறிமுகப்படுத்த உள்ளோம். நடப்பாண்டில், 9 ஆயிரம் இயந்திரங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.