/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணனுக்கு ஏழாண்டு சிறை தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணனுக்கு ஏழாண்டு சிறை
தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணனுக்கு ஏழாண்டு சிறை
தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணனுக்கு ஏழாண்டு சிறை
தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணனுக்கு ஏழாண்டு சிறை
ADDED : ஜூன் 30, 2025 10:52 PM
கோவை; தம்பியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற அண்ணனுக்கு, ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை, ரத்னபுரியை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மகன்கள் முத்துகுமார்,58, கணேசன்,52. இருவரும் சேர்ந்து காந்திபுரம், 100 அடி ரோட்டில், வாடகை கட்டடத்தில் ஹோட்டல் நடத்தி வந்தனர். இந்நிலையில், முத்துகுமார் வேறு பகுதியில் ேஹாட்டல் நடத்த சிதம்பரம் ஏற்பாடு செய்து கொடுத்தார். இதனால், 100 அடி ரோட்டிலுள்ள ேஹாட்டல், கணேசனுக்கு ஒதுக்கப்பட்டது.
இந்த சூழலில், கணேசன் ேஹாட்டல் நடத்திய கட்டடத்தை, அதன் உரிமையாளர் காலி செய்ய வைத்தார். இதற்காக, அட்வான்ஸ் தொகை மற்றும் இழப்பீடாக, 50 லட்சம் ரூபாய் கொடுத்தனர். இத்தொகையை பங்கு பிரிப்பதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதமாக மாறியது.
2017, நவ., 9ல், இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், முத்துகுமார் ஆத்திரமடைந்து கணேசனை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். படுகாயமடைந்த கணேசன், தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார்.
இது தொடர்பாக, ரத்னபுரி போலீசார் விசாரித்து, முத்துகுமாரை கைது செய்து, கோவை மூன்றாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில், வழக்கு தாக்கல் செய்தனர்.
விசாரித்த நீதிபதி தமயந்தி, முத்துகுமாருக்கு ஏழாண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில், சிறப்பு வக்கீல் கிருஷணமூர்த்தி ஆஜரானார்.