/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வாட்டர் போலோ போட்டி: மாணவர்களுக்கு வெண்கலம்வாட்டர் போலோ போட்டி: மாணவர்களுக்கு வெண்கலம்
வாட்டர் போலோ போட்டி: மாணவர்களுக்கு வெண்கலம்
வாட்டர் போலோ போட்டி: மாணவர்களுக்கு வெண்கலம்
வாட்டர் போலோ போட்டி: மாணவர்களுக்கு வெண்கலம்
ADDED : ஜன 02, 2024 11:41 PM

பொள்ளாச்சி;கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த, 27ம் தேதி முதல், 29ம் தேதி வரை தென் மண்டல வாட்டர் போலோ போட்டிகள் நடைபெற்றன. தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையே போட்டிகள் நடைபெற்றன.
அதில், தமிழகம் சார்பில், பொள்ளாச்சி ஜோதிநகர் சாந்தி பள்ளி மாணவர்கள் ஆண்கள் பிரிவில், பிரநித், ரோஹித் கண்ணா, ரிதன் நித்தீஸ், மிதுல் ஜிஸ்னு, தியானேஷ் லிங்கம் ஆகியோர் வெண்கலம் பதக்கம் (மூன்றாவது இடம்) வென்றனர்.
பெண்கள் பிரிவில், மாணவி மித்ரஸ்ரீயா, வெண்கலம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் வினோத்துக்கு, பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.