/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கால்பந்து பயிற்சியில் சிறுவன் மயக்கமடைந்து உயிரிழப்பு கால்பந்து பயிற்சியில் சிறுவன் மயக்கமடைந்து உயிரிழப்பு
கால்பந்து பயிற்சியில் சிறுவன் மயக்கமடைந்து உயிரிழப்பு
கால்பந்து பயிற்சியில் சிறுவன் மயக்கமடைந்து உயிரிழப்பு
கால்பந்து பயிற்சியில் சிறுவன் மயக்கமடைந்து உயிரிழப்பு
ADDED : மே 31, 2025 04:58 AM
கோவை; கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறுவன் உயிரிழந்தான்.
துடியலுார், ஸ்ரீவத்சா கார்டன் பகுதியை சேர்ந்தவர் செந்தில், 44; இவரது மகன் கிருத்திக், 14. தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து முடித்திருந்தார்.
தேர்வு விடுமுறை என்பதால், தினமும் மாலை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கால்பந்து அகாடமியில் பயிற்சி பெற்று வந்தார். செந்தில் அவரை தினமும் காரில் அழைத்து சென்று வந்தார்.
நேற்று முன்தினம் பயிற்சியில் இருந்த கிருத்திக், மயக்கம் வருவதாக கூறியுள்ளார். செந்தில் அவரை காரில் ஏற்றிக்கொண்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சிறுவனின் வாயில் நுரை தள்ளி மயக்கமடைந்தார். அருகே உள்ள மருத்துவமனையில் பரிசோதித்த போது, சிறுவன் வரும் வழியில் உயிரிழந்ததாக தெரிவித்தனர். தகவல் அறிந்த சரவணம்பட்டி போலீசார், சிறுவனின் உடலை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.