/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்
கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்
கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்
கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்
ADDED : மே 22, 2025 01:21 AM

கோவை,; கோவை கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, இ-மெயிலில் வந்த தகவலையடுத்து, நேற்று மதியம் அலுவலகம் முழுக்க, மெட்டல் டிடெக்டர் உதவியோடு சல்லடை போட்டு தேடினர், வெடிகுண்டு கண்டறியும் போலீசார்.
கோவை கலெக்டர் அலுவலக இ-மெயிலுக்கு, நேற்று ஐ.பி.முகவரி ஒரு இ-மெயில் வந்திருந்தது. அதில் கலெக்டர் அலுவலக புதிய கட்டடத்தில், வெடிகுண்டுகள் வைத்திருப்பதாகவும் அது சில மணி நேரங்களில் வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து, உடனடியாக கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நிறைமதி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு, தகவல் தெரிவித்தார். புகாரையும் பதிவு செய்தார். கோவை மாநகர போலீசிலுள்ள, வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் மோப்பநாய்கள், கலெக்டர் அலுவலகத்திலுள்ள, நான்கு தளங்களிலும் உள்ள ஒவ்வொரு அறையிலும், மெட்டல் டிடெக்டர் பயன்படுத்தி, சோதனை மேற்கொண்டனர். மோப்ப நாய்கள் எதையும் அடையாளம் காட்டவில்லை. வெடிபொருளும் சிக்கவில்லை. இதையடுத்து, இ-மெயிலில் வந்தது வெறும் மிரட்டல் என்பது தெரியவந்தது.