ADDED : ஜூன் 24, 2025 11:05 PM
கோவை; உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு, வேளாண் பல்கலையில் ரத்ததான முகாம் நேற்று நடந்தது.
இ.எஸ்.ஐ., மருத்துவமனையுடன் இணைந்து முகாம் நடத்தப்பட்டது. பல்கலை பதிவாளர் தமிழ்வேந்தன் முகாமை துவக்கி வைத்தார்.
பல்கலை மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், டிரைவர்கள், தொழிலாளர்கள் என, 155 பேர் ரத்ததானம் செய்தனர்.
இ.எஸ்.ஐ., மருத்துவமனை ரத்த வங்கி தலைமை மருத்துவர் உமாசரோஜினி முகாமை நடத்தினார். பல்கலை டீன்(வேளாண்மை) வெங்கடேச பழனிசாமி, மாணவர் நலத்துறை டீன், மரகதம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.