ADDED : பிப் 12, 2024 12:24 AM

சூலுார்:கரவளி மாதப்பூரில் பா.ஜ., கொடியேற்று விழா நடந்தது.
சூலுார் வடக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், சூலுார் அடுத்த கரவளி மாதப்பூரில், கொடியேற்று விழா நடந்தது. மாவட்ட நிர்வாகி ஸ்ரீ நந்தகுமார் கொடியேற்றி வைத்து, பண்டிட் தீனதயாள் உபாத்யாயா நினைவுகளை பகிர்ந்து கொண்டார். பல பெரியவர்கள் உயிரை கொடுத்து கட்சியை வளர்த்தனர். அதன் காரணமாக படிப்படியாக கட்சி வளர்ந்து இன்று பாரத நாட்டை ஆள்கிறது. ஊழலற்ற ஆட்சியை கொடுக்கும் பிரதமர் நரேந்திர மோடியை, மீண்டும் பிரதமராக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
தொடர்ந்து, புதிய உறுப்பினர் சேர்க்கை நடந்தது. 25 பெண்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. ராமாட்சியம்பாளையம் பா.ஜ., நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.