/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பில்லுார் அணை மூன்றாவது முறையாக நிரம்பியது பில்லுார் அணை மூன்றாவது முறையாக நிரம்பியது
பில்லுார் அணை மூன்றாவது முறையாக நிரம்பியது
பில்லுார் அணை மூன்றாவது முறையாக நிரம்பியது
பில்லுார் அணை மூன்றாவது முறையாக நிரம்பியது
ADDED : ஜூன் 25, 2025 10:48 PM
மேட்டுப்பாளையம்; பில்லூர் அணைக்கு வினாடிக்கு, 15 ஆயிரத்து, 120 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், முழு கொள்ளளவையும் எட்டி, மூன்றாவது முறையாக நிரம்பி வழிகிறது.
கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம், 85.75 அடியாக இருந்தது. பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான அப்பர் பவானி, அவலாஞ்சி மற்றும் கேரளாவில் கனமழை பெய்ததை அடுத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, பில்லூர் அணைக்கு வினாடிக்கு, 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம், வெகுவாக உயர்ந்து, 95 அடியாக உயர்ந்தது. இரவு, 7:00 மணிக்கு அணையில் நீர்மட்டம், முழு கொள்ளளவான, 97 அடியை எட்டி, நிரம்பி வழிந்தது.
அதன் பின் அணைக்கு வருகின்ற, வினாடிக்கு, 15 ஆயிரத்து, 120 கன அடி தண்ணீர் முழுவதையும், அப்படியே நான்கு மதகுகள் வழியாக, தலா 3,000 ஆயிரம் கன அடி தண்ணீரும், மின்சாரம் உற்பத்தி செய்ய, 3,000 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இரண்டு மாதத்தில் மூன்றாவது முறையாக, பில்லூர் அணை நிரம்பி வழிகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.