ADDED : ஜன 12, 2024 08:57 PM
மேட்டுப்பாளையம்:காரமடை அருகே டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜூ, 55. இவர் ஜடையம்பாளையம் டாஸ்மாக் கடைக்கு, தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின் வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்று மது அருந்தியுள்ளார். வெளியே வந்து பார்த்த போது, ராஜூவின் இருசக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது.
இதுதொடர்பாக சிறுமுகை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
---