ADDED : செப் 01, 2025 07:13 PM
பொள்ளாச்சி:
ஆனைமலை அருகே, வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசின் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை நடந்தது. எம்.பி. ஈஸ்வரசாமி தலைமை வகித்து, அடிக்கல் நாட்டினார். தி.மு.க. கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் உடனிருந்தார்.
பேரூராட்சியின் 16, 8 மற்றும் 10வது வார்டில், 16.90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேவர்பிளாக் கற்கள் அமைத்தல்; 13 மற்றும் 14வது வார்டில், 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய வீடுகள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேபோல, 7 வது வார்டில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையமும் திறந்து வைக்கப்பட்டது.