Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பாரதியார் பல்கலை பதிவாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

பாரதியார் பல்கலை பதிவாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

பாரதியார் பல்கலை பதிவாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

பாரதியார் பல்கலை பதிவாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

ADDED : ஜூன் 11, 2025 07:34 PM


Google News
கோவை; நேற்று நடப்பதாக இருந்த, பாரதியார் பல்கலையின் பதிவாளர் நேர்முகத் தேர்வு, மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

பாரதியார் பல்கலையில், 2022ம் அக்., மாதம் முதல் துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், கல்லுாரி மேம்பாட்டு கவுன்சில் டீன், துணை பதிவாளர், தொலைதுார கல்வி மைய இயக்குனர், நிதி அலுவலர், பல்கலை பொறியாளர், உதவி பொறியாளர், மக்கள் தொடர்பு அலுவலர் உட்பட, 200 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஆண்டுக்கணக்கில் காலியாக உள்ளன.

பல்கலை பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்களை நிரப்ப, கடந்தாண்டு ஆக., ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணப்பிக்க செப்., மாதம், 12 வரை காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இதற்காக வந்த விண்ணப்பங்களை, பல்கலை நிர்வாகம் பரிசீலித்து கடந்த பிப்., மாதம், இப்பணியிடங்களை நிரப்ப, சிறப்புக்குழு(பேனல்) ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று நேர்முகத் தேர்வு சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. சென்னையில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக பதிவாளர் பதவிக்கான நேர்முகத் தேர்வு, மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என, விண்ணப்பித்தவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப, அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அது அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அதே நிலை, பதிவாளர் பணியிடத்துக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்கின்றனர் பேராசிரியர்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us