/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பேருதான் 'ஸ்மார்ட் சிட்டி!' சிறுமழைக்கு கூட பெரிய 'அட்ராசிட்டி': கழிவுநீரால் நிறையுது குடிநீர் தொட்டிபேருதான் 'ஸ்மார்ட் சிட்டி!' சிறுமழைக்கு கூட பெரிய 'அட்ராசிட்டி': கழிவுநீரால் நிறையுது குடிநீர் தொட்டி
பேருதான் 'ஸ்மார்ட் சிட்டி!' சிறுமழைக்கு கூட பெரிய 'அட்ராசிட்டி': கழிவுநீரால் நிறையுது குடிநீர் தொட்டி
பேருதான் 'ஸ்மார்ட் சிட்டி!' சிறுமழைக்கு கூட பெரிய 'அட்ராசிட்டி': கழிவுநீரால் நிறையுது குடிநீர் தொட்டி
பேருதான் 'ஸ்மார்ட் சிட்டி!' சிறுமழைக்கு கூட பெரிய 'அட்ராசிட்டி': கழிவுநீரால் நிறையுது குடிநீர் தொட்டி

வடிகால் வசதி இல்லை
மழைநீர் வடிகால் வசதி போதியளவில் இல்லாத நிலையில், பாதிப்புகளை தவிர்க்கும் விதமாக, விடுபட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் அமைக்கவும், ஏற்கனவே இருக்கும் வடிகால்களை மேம்படுத்தவும் மாநகராட்சி முடிவு செய்தது.
ஊர்ந்த வாகனங்கள்
தொடர்ந்து, ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்தது. இம்மழையால் கிக்கானி ரயில்வே பாலத்தில் மழைநீர் சூழ, கடக்க முயன்ற கார் ஒன்று சிக்கிக்கொண்டது. சாயிபாபாகோவில் அருகே மெயின் ரோட்டில், மழைநீர் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் ஊர்ந்து சென்றனர்.
குடிநீரில் கலந்த கழிவுநீர்
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'எங்கள் குடியிருப்புகளில் இருந்து செல்லும் பாதாள சாக்கடை இணைப்பு, முத்தண்ணன் குளம் அருகே மேடான வழித்தடத்தில் செல்கிறது. இதனால், அப்பகுதியில் சேகரமாகும் கழிவுநீரும் ரிவர்ஸ் எடுத்து, எங்கள் வீட்டு கழிவறைக்குள் வருகிறது. இன்று(நேற்று) பெய்த மழைக்கு, குடிநீர் தொட்டிக்குள் கழிவுநீர் கலந்த, மழைநீர் புகுந்து விட்டது' என்றனர்.