ADDED : ஜன 05, 2024 11:15 PM
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் பங்களா மேடு பகுதியை சேர்ந்தவர் மான் என்கிற ராஜ்குமார், 32. இவர் அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கோத்தகிரி ரோடு ஓடந்துறையில் ராஜ்குமார், தனது நண்பர் அக்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, காட்டூர் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன், 24, மதுபோதையில் வந்து இவர்களிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது.
அப்போது, சவுந்தர்ராஜன் அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து ராஜ்குமாரை சரமாரியாக தாக்கியதில் அவர் காயம் அடைந்தார்.
புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் சவுந்தரராஜனை கைது செய்தனர்.--