/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பண்ணை வீட்டில் பவதாரிணி உடல் அடக்கம்பண்ணை வீட்டில் பவதாரிணி உடல் அடக்கம்
பண்ணை வீட்டில் பவதாரிணி உடல் அடக்கம்
பண்ணை வீட்டில் பவதாரிணி உடல் அடக்கம்
பண்ணை வீட்டில் பவதாரிணி உடல் அடக்கம்
ADDED : ஜன 28, 2024 12:21 AM

கூடலுார்;இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி, 47; பின்னணி பாடகி. சில மாதங்களாக கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜன.,25 மாலை இறந்தார்.
அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டு, தி.நகரில் இளையராஜாவின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.
நேற்று முன்தினம் இரவு உடல் ஆம்புலன்சில் தேனி மாவட்டம், கூடலுார் லோயர்கேம்ப் குறுவனத்து பாலம் அருகே உள்ள பண்ணை வீட்டிற்கு நேற்று காலை, 11:00 மணிக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு, கண்ணாடி பேழையில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இளையராஜா மதியம், 2:00 மணிக்கு வந்தார். இளையராஜா மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்தனர். மாலை, 4:00 மணிக்கு சடங்குகள் துவங்கி, 5:00 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.
பண்ணை வீட்டில் இளையராஜாவின் தாய் சின்னத்தாயி சமாதி உள்ளது. இதை ஒட்டி, 2011ல் இறந்த அவரது மனைவி ஜீவாவின் சமாதியும் உள்ளது. தற்போது இதற்கு அருகில் பவதாரிணி உடலும் அடக்கம் செய்யப்பட்டது.
இயக்குனர் பாரதிராஜா, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், எம்.பி., ரவீந்திரநாத், எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன், நடிகர் கிருஷ்ணா, டிரம்ஸ் மணி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.