/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கூடைப்பந்து போட்டி: இன்று துவக்கம்கூடைப்பந்து போட்டி: இன்று துவக்கம்
கூடைப்பந்து போட்டி: இன்று துவக்கம்
கூடைப்பந்து போட்டி: இன்று துவக்கம்
கூடைப்பந்து போட்டி: இன்று துவக்கம்
ADDED : ஜன 02, 2024 11:44 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி நேஷனல் கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில், தாக்கூர் கோப்பைக்கான, 26வது ஆண்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் இன்று, 3ம் தேதி துவங்கி வரும், 7ம் தேதி வரை நடக்கிறது.
போட்டிகள், நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடக்கின்றன. அதில், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 26 அணிகள் பங்கேற்க உள்ளன.
இத்தகவலை நேஷனல் கூடை பந்தாட்ட கழக தலைவர் நித்தியானந்தன், செயலாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்தனர்.