Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சாலையோர வியாபாரிகளுக்கு நாளை வங்கி கடன் முகாம்

சாலையோர வியாபாரிகளுக்கு நாளை வங்கி கடன் முகாம்

சாலையோர வியாபாரிகளுக்கு நாளை வங்கி கடன் முகாம்

சாலையோர வியாபாரிகளுக்கு நாளை வங்கி கடன் முகாம்

ADDED : செப் 21, 2025 12:02 AM


Google News
கோவை : மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த சாலையோர வியாபாரிகளுக்கு, வங்கிகள் வாயிலாக கடன் வழங்கும் முகாம் நாளை முதல், 26ம் தேதி வரை நடக்கிறது.

மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடக்கும் இம்முகாமில், சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடன் ரூ.15 ஆயிரம் பெறவும், ஏற்கனவே வங்கி கடனுக்கு விண்ணப்பித்து கடன் கிடைக்காதவர்கள், வியாபாரிகளுக்கான அடையாள அட்டை, ஆதார், வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களுடன் பயன் பெறலாம்.

உணவு மற்றும் உணவு சார்ந்த பொருட்கள் வியாபாரம் செய்யும், சாலையோர வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, பயிற்சி வழங்கப்படுவதால், முகாமை பயன்படுத்திக் கொள்ள, மாநகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us