/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வாழையில் நோய் தாக்குதல் விவசாயிகள் கவலை வாழையில் நோய் தாக்குதல் விவசாயிகள் கவலை
வாழையில் நோய் தாக்குதல் விவசாயிகள் கவலை
வாழையில் நோய் தாக்குதல் விவசாயிகள் கவலை
வாழையில் நோய் தாக்குதல் விவசாயிகள் கவலை
ADDED : ஜூன் 06, 2025 11:44 PM

மேட்டுப்பாளையம்; சிறுமுகை பகுதியில் வாழை விவசாயம் பிரதானமாக உள்ளது. இந்நிலையில் சிறுமுகை அடுத்த ஆலாங்கொம்பு அழகிரி சுரேஷ் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே உள்ள விவசாய நிலங்களில், உள்ள வாழைகளில் இலைகள் பாதி அளவு காய்ந்தும், பாதி அளவு பச்சையாக உள்ளது. இந்த நோய் தாக்குதலால் மகசூல் முற்றிலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஆலாங்கொம்பு விவசாயம் நிலத்தில் வாழை இலை காயும் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இது பொட்டாசியம் சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்த மருந்து அடிக்காமல் விட்டால் மகசூல் பெரிதும் பாதிக்கும். எனவே பொட்டாசியம் நைட்ரேட் பன்னிரண்டரை கிலோ, மெக்னீசியம் சல்பேட் பன்னிரண்டரை கிலோ, ஜிங் 5 கிலோ ஆகியவை ஒன்றாக, 200லிட்டர் தண்ணீரில் கலந்து, சொட்டு நீரில் விட்டால், இந்த மருந்து வாழையின் வேர் வரை செல்லும். மருந்துடன் கூடிய தண்ணீரை வேர் உறிஞ்சும் பொழுது, நோய் தாக்குதல் முற்றிலுமாக குறையும். எனவே விவசாயிகள் இந்த மருந்தை, இரண்டு மாதத்திற்கு, இரண்டு முறை அடித்தால், வாழை நோய் தாக்குதலில் இருந்து குறையும். இவ்வாறு தோட்டக்கலை அலுவலர் கூறினார்.