ADDED : செப் 25, 2025 12:39 AM
கோவை: மாநகராட்சி மத்திய மண்டலம், ரேஸ்கோர்ஸ், வருமான வரி அலுவலகம் அருகே மரக்கன்று நடும் பணியை எம்.பி., ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி, கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர்.
எஸ்.ஐ.எச்.எஸ்., காலனியில் மாநகராட்சி பொது நிதியில் 1.46 கோடியில், 4.14 ஏக்கர் பரப்பளவில் மூங்கில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. விளையாட்டு திடல், பட்டாம்பூச்சி பூங்கா உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெறும்.
டாக்டர் பாலசுந்தரம் ரோட்டில் ரூ.43.50 லட்சம், சுந்தராபுரம் பகுதியில் ரூ.22.60 லட்சம், மசக்காளிபாளையம் ரோட்டில் ரூ.45 லட்சத்தில், விபத்துகளை தவிர்க்கும் மையத்திட்டுகள் அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டன.