ADDED : ஜன 03, 2024 12:14 PM
கோவை: கோவை மதுக்கரை வனச்சரக பகுதியில் உடலில் காயமுடன் மீட்கப்பட்ட யானைக்குட்டி உயிரிழந்தது.
யானைக்கூட்டத்தில் இருந்து வெளியேறிய இந்த யானைக்குட்டி, கோவைப்புதூர் அருகே வனத்துறை அதிகாரிகள் மீட்டனர். முழு வளர்ச்சியின்றி பிறந்த யானைக்குட்டியை சிறுத்தை தாக்கி இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.